யாழ்ப்பாண நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களுக்குள் திரைப்படம் பார்க்கச் சென்றவர்களுக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின், சுகாதாரப் பிரிவினைத் தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

குறித்த நபர்கள், தங்களது பிரதேசத்தில் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையோ அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ தொடர்புகொள்ளுமாறும் அறிவிப்பு விடுத்துள்ளார்.