கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண்ணை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் பேமசிறி கொண்டுசென்ற கைப்பை அவரது வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

எனினும் அந்தப் பையில் சந்தேகத்திற்கு இடமாக எந்தவொரு இரத்தக்கறையும் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவொருபுறமிருக்க, அவரது மூத்த சகோதரனும் தகாத காதல் தொடர்பினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேமசிறி தற்கொலை செய்துகொண்ட அதே இடத்திலேயே கடந்த வருடத்திற்கு முதல் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இதேவேளை, ஹங்வெல்ல பகுதியில் கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி யுவதியின் தலை இன்னமும் கிடைக்கவில்லை என்றும், தேடல் நடவடிக்கை தொடர்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.