கதிர்காமம், பெல்லன்வில, பில்லேவ, களனி, இரத்தினபுரி மற்றும் நவகமுவ பகுதிகளில் உள்ள வணக்கஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் மாலைகளை பூசைக்கு பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும், துணியால் செய்யப்பட்ட மாலை மற்றும் உண்மையான பூக்களால் செய்யப்பட்ட மாலையை பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க நேற்று இதை தெரிவித்தார். மார்ச் 22க்குப் பின்னர் பிளாஸ்டிக் மாலைகளின் பயன்பாடு தடை செய்யப்படும் என்று அவர் கூறினார். வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் மாலைகள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.