HomeNewsகொலை நடந்த தினத்தில் சந்தேகநபர் எங்கே சென்றார்? வெளியானது புதிய தகவல்கள்

கொலை நடந்த தினத்தில் சந்தேகநபர் எங்கே சென்றார்? வெளியானது புதிய தகவல்கள்

தலை இல்லாமல் ஒரு பெண்ணின் சடலம் கொழும்பு – டாம் வீதியில் மீட்கப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் தற்போது பல செய்திகள் வெளிவந்துள்ளன. சம்பவம் நடந்த தினத்தன்று (01.03.2021) சடலத்தை வீதியில் வைத்து விட்டுச் சென்ற நபர் மீண்டும் மாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து மொகனராகலை செல்லும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அன்றிரவு பெல்மடுல்ல பகுதியில் இரவு உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் இரவு 11.30 மணியளவில் புத்தல நகரில் பஸ்ஸில் இருந்து இறங்கினார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் சில சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்ததாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை அவர் கொண்டு சென்ற பையில் இருந்ததா என விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments