ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில், இலங்கையில் இராணுவ மயப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சி.ஏ. சந்திரப்பெரும தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிடம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை நாட்டில் கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு அரச துறையில் இணைந்துகொள்வதற்கான உரிமை எமது நாட்டில் உள்ளது. மனித உரிமை நிலவரம் மோசமடைவது குறித்து முன்கூட்டிய ஆரம்ப எச்சரிக்கைகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தே.
- Advertisement -
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சுதந்திரமானதில்லை – பக்கச்சார்பானதென தெரிவித்துள்ளார்.