வெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன. குறித்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் இப்பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.