உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
- Advertisement -

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அமைச்சரவை துணைக்குழு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.