அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
- Advertisement -

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதிள்ளது . இதில் 13 பேர் பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார் ட்டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஏனையர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.