தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சாணக்கியன் ஆகிய மூவருமே தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களாவர்.
இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், விநோ நோகராதலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மன்னாரிலும் சிறிதரன் கிளிநொச்சியிலும் தடுப்பூசியை போட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.