கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு நாளைக்குள் தொடர்புடைய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், எனத் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் மேலும் ஆறு இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இடத்தில் அடக்கம் செய்யவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாற்று இடங்கள் குறித்து பரிசீலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.