
ஐக்கிய நாடுகள் சபையின் 46ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகின்றது. இந் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்பு இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
