தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடங்கிய பயணப்பொதியை கொழும்பு – டாம் வீதியில் விட்டுச்சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -

குறித்த நபர் படல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சடலத்தின் அருகே விஷ போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர் விஷத்தை உட்கொண்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.