கிளிநொச்சி இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இன்று அறிவித்தது.
இந்நிலையில், நம்பிக்கை இழந்து, அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -
அத்துடன் இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.