புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) இணக்கம் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய முன்வைத்த கோரிக்கைக்கு பிரதமர் இவ்வாறு இணக்கம் தெரிவித்தார்.
- Advertisement -
சுகாதார சேவை மற்றும் வைத்தியர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வு காணல் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்த யோசனைகள் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன், அரச வைத்திய பீடத்தில் இருந்து 28 தொடக்கம் 30 வரையிலான வயதினையுடையவர்கள் வைத்திய சேவையில் ஈடுபடுகிறார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய அவர்கள் சுட்டிக்காட்டினார்.
- Advertisement -

இவ்விடயம் தொடர்பான யோசனையை கவனத்திற் கொண்ட பிரதமர் அவர்கள் அரச வைத்திய பீடத்துக்கு தெரிவாகும் வைத்தியர்களின் வயதெல்லையை 22 தொடக்கம் 23 ஆக குறைக்க கல்வி அமைச்சுடன் இணைந்து ஒன்றிணைந்த செயற்றிட்டத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.