ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து இதுபோன்ற அறிக்கையை நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையை புறக்கணித்ததற்காக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

இது தொடர்பில் மைத்திரியின் நம்பிக்கைக்குரிய அமைச்சரான மஹிந்த அமரவீரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நான் ஆணையம் அல்லது நீதித்துறை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக முழு ஆய்வை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகிய நாங்கள் வழக்கறிஞர்கள் குழுவை நியமித்து வருகிறோம்.
- Advertisement -
நாளை இது குறித்து விரிவாக விவாதிப்போம். கலந்துரையாடலைத் தொடர்ந்து, கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடக அறிக்கை வெளியிடப்படும். எனினும் இந்த அறிக்கை பொதுமக்கள் எதிர்பார்த்தது அல்ல. இது குறித்து எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன ” என்றார்.