சீனா தனது நாட்டின் உய்குர் சிறுபான்மை இனhத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது என தெரிவிக்கும் தீர்மானமொன்றை கனடாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 266 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் – எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

சீனாவில் ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் டேர்கிக் முஸ்லிம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல், அவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிருந்தும் எங்களிற்கு கிடைத்த வாக்குமூலங்கள் பயங்கரமானவையாக காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் சீனாவில் உண்மையான துயரம் இடம்பெறுகின்றது சீனாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்றார். கனடாவின் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ள சீன தூதுவர், ஜின்ஜியாங்கில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலும் மேற்குலகில் உள்ளவர்களும் விழுமியங்களை பின்பற்றுவது குறித்து தெரிவிக்கின்றனர் ஆனால் உண்மையான தகவல்களை மதிப்பதும் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதுமே உண்மையான விழுமியம் என தூதுவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.