சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும். எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.