இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உள்கட்டமைப்பு மற்றும் உதவித் திட்டங்களில் இருந்து விலகும் முடிவானது பாரிய தவறு என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். WION செய்திக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

இலங்கைக்கு எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட பல சக்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளன. சீனாவுடன் சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டாலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தங்களை வாபஸ் பெறுவதன் மூலம் உருவாக்கப்பட்ட இடைவெளியை சீனாவால் நிரப்ப முடியாது என்றும், அந்த திட்டங்கள் அவசியம் என்றும் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
- Advertisement -
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை ஒரு காலதாமதமானது என்றும் எனினும் இஸ்லாமாபாத்தும் கொழும்பும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணுவதாகவும் குறிப்பிட்டார்.