ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல, பொறுப்பற்ற நடவடிக்கை குறித்தே இந்த அறிக்கையில் காணப்படுகின்றதே தவிர, குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் இதில் காணப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
- Advertisement -
குறித்த அறிக்கை மீது 03 நாட்கள் தொடர் விவாதத்தை நடத்தவும் எதிgbnbர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அணி நாடாggளுமன்றத்தில் கோரியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இந்த சந்தர்ப்பத்தில் எழுந்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சரும், சபை முதல்வருமான தினேஸ் குணவர்தன, ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சபையில் சமர்பிப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 2019இல் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டதற்கிணங்க ஆணைக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பிரதிகளை சபையில் சபாநாயகரின் அனுமதியின் கீழ் சமர்பிக்கின்றேன்.
நாட்டு மக்கள் அறிக்கையில் உள்ள விடயங்களை அறிந்துகொள்வதற்காக சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இதுகுறித்து மீண்டும் ஆராயும்படி சபாநாயகரிடத்தில் கோருகின்றேன். அதேபோல விவாதத்திற்கு இதனை அனுமதிப்பதில் எந்த சிக்கலும் எமக்கு இல்லை என்பதையும் தெரிவிக்கின்றேன் என்று சபையில் தெரியப்படுத்தினார்.