பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பேஸ்புக் நேரலை காட்சிக்காக இவற்றை பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் பொரளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் துறையில் இயந்திர தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது நடத்தை பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தொற்றுநோய் பரவியதிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரச தலைவரான பாகிஸ்தான் பிரதமர் தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பியிருந்தார். எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.