வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றைய தினம் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 வீதி விபத்துக்களினாலே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 8 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 2 பாதசாரிகள் மற்றும் 2 வாகன பயணிகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
