கொரோனாவால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது, அமர்வு நேற்று முன்தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதன் போது அமர்வில் உரையாற்றிய இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா புhதைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் Yousef Al Othaimeen வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கொவிட்19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் ஜனாஸாக்கள் தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய தகனம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.