திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை – ஆனால் இந்தியாவிடம் இருந்து எண்ணெய் குதங்களை இலங்கை அபகரிக்கும் என்ற அர்த்தத்தில் தான் கூறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், “உங்களை பைத்தியக்காரன் என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்த உண்மைத்தன்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியுமா?” என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார். இதற்கு வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -

மனநல வைத்தியரின் கடமையை பிரதமர் செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன், அவ்வாறு மனநல வைத்தியராக பிரதமர் இருப்பார் என்றால் முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்தே அவ்வாறு கூறியிருக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் எமது எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கினர்.
- Advertisement -
இப்போது நாம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உரிமத்தின் கீழ் நிர்வகிக்கவும், ஏனையவற்றை இந்தியாவின் நிறுவனம் ஒன்றின் மூலமாக நிர்வக்கிக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

வெகு விரைவில் இந்தியாவின் எண்ணெய் குதங்கள் எம்வசமாகும் எனவும் பெரும்பாலான பகுதி எமக்கு ஏனையவை இந்தியாவிற்கும் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் அமையும் எனவும் நான் கூறியிருந்தேன்.b எனினும் ஒரு ஊடகம் அவர்களின் அவசர செய்தியில் தவறான மொழிபெயர்ப்புடன் செய்தியை பிரசுரித்துள்ளனர் என்றார்.