ஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு எந்த நாடுமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிவித்தது இல்லை என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிவுரிமை அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலங்கா அரசு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
