இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கொரோனா தொற்றினால் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் மிலான் மற்றும் ரோம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொட்டாவ பகுதியைச் சேந்த 57 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், காலி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இருவரும், 20 வருடங்களுக்கும் மேல் இத்தாலியில் தமது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.