இலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்nசை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளுக்கான காற்று – ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையை செய்துள்ளது. எனினும் இந்தியா அதனை ஆட்சேபித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எனினும் இது மக்களின் நலன்களுக்கு எதிரானது என்று சீன நிறுவனம் கூறியுள்ளளது. எனவே எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் “மூர்க்கத்தனமான தலையீட்டையும்” சட்டரீதியான மற்றும் உண்மை அடிப்படையில் எதிர்ப்பதாக குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனமான சியோன்சொர்-இடென்வின் ஜேவி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச விலைமனுக்கோரல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று நிறுவனம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது.