விடுதலைப்புலிகள் பற்றிய பல்வேறு தகவல்களையும், தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்ட சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய குறித்த சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
- Advertisement -

இது தொடர்பில் பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், குறித்த நபர் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செய்திகளை டிக்டொக் என்ற சமூக ஊடகம் மூலம் வெளியிட்டதாக தெரிவித்தார். இவர் முதலில் முல்லைத்தீவில் வசித்து வந்ததாகவும் பின்னர் ஹட்டன் பகுதியில் குடியேறியதாகவும் தெரிய வந்துள்ளது. அவரது தொலைபேசியை பரிசோதித்ததில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான செய்திகளை உருவாக்கியிருப்பதும் தெரியவந்தது.