
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகியிருக்கின்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். மாத்தறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
- Advertisement -

கல்வியை தவிர, விளையாட்டு உட்பட வேறு பிரிவுகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஈடுபடுத்தாமையே இதற்குப் பிரதான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.