வறட்சியான காலநிலையால் பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் தடை செய்யப்படலாம் அல்லது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான வழிகாட்டல்களும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.