பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள அந்நாட்டு உள்விவகார செயலாளருக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக முறையான ஆதாரங்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீடிக்கபட வேண்டும் எனின் இது தொடர்பில் உள்விவகார அமைச்சே தீர்மானிக்க வேண்டுமென, தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்த பிரித்தானிய ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
- Advertisement -
பிரித்தானிய உள்விவகார அலுவலகம், கடந்த 2018ஆம் அண்டு டிசம்பர் 10ஆம் திகதி, விடுதலைப்புலிகள் அமைப்பினை தடை செய்யும் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பினை தடை செய்வதற்கு நியாயமான மற்றும் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அந்த நேரத்தில் பிரித்தானிய உள்விவகார செயலாளர் தீர்மானம் மேற்கொண்டிருந்தார்.
- Advertisement -

இந்நிலையில், பிரித்தானியாவின் பயங்கரவாத தடைச் சட்டம் 2000 இன் கீழ், தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை நீக்க வேண்டுமென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களத் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சாதகமான பதிலை வழங்கியது.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி வழங்கப்பட்ட முதலாம் கட்டத் தீர்ப்பில், விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் தீர்மானம் தவறு எனவும், உள்விவகார செயலாளருக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, நிபுணர் குழுவின் கருத்துக்கள் தவறாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் எலிசபெத் லாயிங், ரிச்சர்ட் விட்டம் கியூசி மற்றும் பிலிப் நெல்சன் ஆகிய மூவர் அடங்கிய தீர்ப்பாயம் நேற்று இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொண்டது. இதன்போது, விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பிறப்பிக்குமாறு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டு ஆணைக்குழு மறுத்துவிட்டது.
எவ்வாறெனினும், தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணைக்குழுவிடம் பிரித்தானிய அரச தரப்பு, கோரியிருந்ததோடு, தடை தொடர்பில் தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கான விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக 90 நாட்களை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய மேன்முறையீட்டாளர்கள் அனுமதி கோருகின்றனர். அந்த விண்ணப்பத்தின் முடிவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.b இந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகின்றது என உள்விவகார அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.