கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதானம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கான விசேட பிரார்த்தனையொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும், சர்வதேச கிறிஸ்தவத் தலைவர்களின் இலங்கைக்காக ஒருங்கிணைப்பாளருமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டோ தலைமையில் இந்த விசேட பிரார்த்தனையானது சமூக வலைத்தளத்தின் ஊடாக நடத்தப்படவுள்ளது.
- Advertisement -

இலங்கை நேரப்படி இன்று இரவு 7 மணியளவில் முகநூல் மற்றும் சூம் (Zoom) ஊடாக நடத்தப்படவுள்ள இப்பிரார்த்தனையில் 40ற்கும் மேற்பட்ட சர்வதேச நாட்டின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.