நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், ஏனைய 7 மரணங்கள் ஏற்கனவே வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

நேற்றைய தினம் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 வாகனச் சாரதிகளும், 7 பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகனம் செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.