
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹியங்கனையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கடந்த ஐந்தாம் திகதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சின் கிசிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

10 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் குணமடைந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட பெண் வீட்டில் நான்கு நாட்கள் தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார். எனினும் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த பெண் பதுளை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணத்தை மருத்துவ அதிகாரிகள் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.