திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் மீண்டும் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,
- Advertisement -

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் குறித்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்த விடயத்தை வேறு எங்கும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இந்திய உயர்ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்தார்.
- Advertisement -

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரயோசனமான முறையில் பயன்படுத்தப்படாதிருந்த – 2003ஆம் ஆண்டிலிருந்து எமக்கு இல்லாமல் போயிருந்த எமது நாட்டின் மிகப்பெரிய சொத்தான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளது. ஆகவே இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து இதனை அபிவிருத்தி செய்து, நாட்டிற்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடமாக மாற்றியமைப்போம் என்றார்.