கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்வரும் காலத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் போது சுகாதார பிரிவினருக்கு அதனை கட்டுப்படுத்த முடியவில்லையென குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
22 மில்லியன் மக்களையும் கவனிப்பதற்காக ஊழியர்கள் இல்லை எனவும், இதனை சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரினால் மாத்திரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியயமானது என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.