ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வாங்குவதற்கு இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். கட்சியை வாங்குவது என்பது இந்தியாவின் யோசனைகளை செற்படுத்துவதாகும்.
- Advertisement -

இது பணத்தை கொடுத்து வாங்குவது என்று அர்த்தம் இல்லை. ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை இந்தியாவின் தேவைக்கு ஏற்ப செற்படுத்துவது என்று பொருள்படும் என கூறினார். இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள சிறுபான்மை கட்சிகளை அகற்றுவதற்காக, பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் வேலை செய்வதாகவும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.