
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கொரேனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக குறித்த மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

கடந்த வாரம் அதே கல்லுரியில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தரம் 09 பி பிரிவில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
- Advertisement -

இந்நிலையிலேயே மாணவன் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளான மாணவனின் வீட்டில் இருந்து நுவரெலியா பகுதியில் உள்ள மாணவன் ஒருவர் தங்கியிருந்து பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லுரியில் கல்விகற்று வருவதோடு, குறித்த மாணவன் பொகவந்தலாவ செல்வகந்த பகுதியில் ஆசிரியை ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆங்கில வாகுப்பிற்கும் சென்று வந்துள்ளார்.

கொரோனா தொற்றக்குள்ளான ஆசிரியை மற்றும் வகுப்பறையில் கல்விகற்று வந்த 11 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான மாணவனை பொகவந்தலாவ கொரோனா சிகிக்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற