இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் மேலும் 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- Advertisement -

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 346 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 664 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.