ஒப்பிடுவதை நீதியமைச்சர் நிறுத்த வேண்டும் – தேரர் எச்சரிக்கை பெரும்பான்மையின மக்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேசவழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது. பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித்து நீதியமைச்சர் எம்முடன் நேரடியான பகிரங்க விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் விவாக சட்டம் குறித்து அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றினேன். இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் விவாக சட்டம் குறித்து கருத்துரைக்கவில்லை.
மனித உரிமை கோட்பாட்டை முழுமையாக செயற்படுத்தும் போது மத காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. நான் குறிப்பிட்ட கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளை ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள். நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அலி சப்ரி நீதியமைச்சராக இருந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அமைச்சராக இருந்து பதிலளித்துள்ளமை கவலைக்குரியது.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியின் காணப்படும் தவறுகளை இவர் திருத்துவார் என எதிர்பார்த்தேன் ஆனார் இவரது செயற்பாடுகள் எதிர்பார்ப்புக்களை தோற்கடித்துள்ளது. முஸ்லிம் விவாகசட்டத்தை நீக்க வேண்டுமாயின் கண்டி சட்டம், தேசவழமை சட்டம்,மேல்நாட்டு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்ட கருத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது. இச்சட்டங்களினால் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இவை நாட்டின் பொதுச்சட்டத்திற்கு உட்பட்டதாக உள்ளது.ஆனால் முஸ்லிம் விவாக சட்டம் காதி நீதிமன்றத்தினால் செயற்படுத்தப்படுகிறது. இது ஒரு நாடு- ஒரு சட்டம் என்றகொள்கைக்கு முற்றிலும் முரணானது.
காதி நீதிமன்றினால் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. ஆனால் தேசவழமை சட்டம், மேல்நாட்டு சட்டத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை. மகாசங்கத்தினருக்கு பிரத்தியேகமாக நீதிமன்றம் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே முஸ்லிம் விவாக சட்டத்தை பௌத்த சாசனத்தையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாக்க உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி பொறுப்பான நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். இவ்விடயம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன். அனைத்து காரணிகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். முஸ்லிம் விவாக சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் ஏனைய சட்டங்களை சார்பாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.