
கடந்த 2020ஆம் வருடத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஊடாக நாட்டுக்கு 7,104 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதை தெரிவித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 வீத அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த வருடத்தில் 957 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கிமேலும் தெரிவித்துள்ளது.