பாரிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்கால கனவை சுமந்து இன்றையதினம் முதல்நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில் கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை நகரிலேயே இந்த பரிதாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயது சிறுவனே கொல்லப்பட்டவனாவான்.
- Advertisement -

இரட்டை சகோதரர்களான இவர்கள் தமது பெரிய தாயுடன் பதுளையில் உள்ள சரஸ்வதி ஜூனியர் பாடசாலைக்கு தரம் 1 அனுமதி பெற்று சென்றவேளை பாரிய கொள்கலன் ஒன்று மோதி வருண் பிரதீஷ் கொல்லப்பட்டான். பெரிய தாய் படுகாயமடைந்த நிலையில் மற்றய சிறுவன் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.