இலங்கையில் ஒரு வாரத்திற்குள் மூன்று மலேரியா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை 2016 ஆம் ஆண்டு மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் மலேரியா நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மலேரியா நோயாளிகளும் ஆபிர்க்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

அவர்கள் இலங்கைக்கு வந்தவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மலேரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பொரலஸ்கமுவ, பேருவல, மற்றும் ஹொரன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு சுமார் 30 மலேரியா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.