
பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த்பட்டுள்ளதாக பல்லைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பரீட்சைக்கு தயாரான 300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 08 மாணவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதுடன் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.