ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள எவரும் ராஜபக்சாக்களை விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பொல்கவாலையில் ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தில் உள்ள எவரும் ஊடகங்களின் முன்னால் கருத்துக்களை தெரிவித்து அப்பாவிகளின் குணாதிசயங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது.

சிலர் மூத்த அண்ணணை விரும்புகின்றனர். இளைய சகோதரரை விமர்சிக்கின்றனர். இது வேடிக்கையான விடயம் அரசாங்கத்தை முன்னெடுக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ச நள்ளிரவில் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது அவரை சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார்கள் என தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ரக்பி போட்டியை ஏற்பாடு செய்தவரிடமிருந்து பணம் பெற்றார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சாக்களுக்கு அரசாங்கத்திற்குள் இருந்து எதிர்ப்பு வருவதை சர்வதேச சமூகம் கூட விரும்புகின்றது என தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த நிலைமையை பிரேமதாசவும் விரும்புகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.