பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான யோசனை திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -

இதனடிப்படையில், முதற் கட்டமாக மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடங்களில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.