
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்றையதினம் 7 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
