
மகரகம – பிலியந்தல பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வீடு மற்றும் அருகிலுள்ள கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்ச்சேதம் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் வெளிவராத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.