வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக வாகனத்தின் சாரதி வாகனத்தினை வீதி ஓரத்தில் நிறுத்தி வாகனத்தின் முன் பக்கமாக நின்ற வேளையில் கந்தளாயில் இருந்து நெல் ஏற்றி வந்த லொறி வீதியோரமாக நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை மோதியுள்ளது.
- Advertisement -
இதில், சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத்தின் சாரதியான ஏறாவூர் 02 ஐ காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அஹமட் லெப்பை லாபீர் (61) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் இரண்டு வாகனங்கள் மற்றும் லொறி சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.