காதலர் தினமான இன்று கைத் தொலைபேசிகளுக்கு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கின்றனர். கைத் தொலைபேசி அல்லது சமூக ஊடக கணக்குகள் மூலமாகவோ இந்த போலி குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று கூறினார். “நீங்கள் காதலர் தினத்தில் ஒரு மதிப்புமிக்க பரிசை வென்றுள்ளதாகவும், உங்கள் காதலன் அல்லது காதலி உங்களுக்கு ஒரு பரிசை அனுப்பியுள்ளதாகவும்,

அதைப் பெற சிறிது பணம் செலுத்த வேண்டும் என்று போலி தகவல் உங்களுக்கு வரும். இது ஒரு மோசடி குழுவால் செய்யப்படுகிறது. எனவே, இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் என்றும், அத்தகைய வைப்புத்தொகை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்பும் இதுபோன்ற ஒரு எச்சரிக்கையை பொலிஸார்