HomeNewsLocal Newsயாழ் .போதனா வைத்தியசாலையில்தாதியர்களின் பொறுப்பற்ற செயல் மக்கள் விசனம் !

யாழ் .போதனா வைத்தியசாலையில்தாதியர்களின் பொறுப்பற்ற செயல் மக்கள் விசனம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் டிக்கட் வெட்டப்படுவதாக வைத்தியரால் கையெழுதிடப்பட்ட நிலையில் விடுப்பு அட்டையை பெற்றுக் கொள்ள நோயாளிகள் சுமார் 7 மணி நேரம் காத்திருந்த சம்பவம் (04) இடம்பெற்றுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் 24ம் இலக்க விடுதியில் தங்கியிருந்த நோயாளிகளின் உடல் நிலையை இன்று (04) காலை 9 மணியளவில் பார்வையிட்ட பிரதம வைத்தியர், ஆறு நோயாளிகளை விடுவிப்பதாக கையெழுத்திட்டுச் சென்றார்.

உடனடியாக வீடு செல்ல முடியும் என்று நோயாளிகள் எண்ணியிருந்த போதிலும் டிக்கட் வைத்தியரிடம் உள்ளது, 2 மணிக்கே விடுப்பு அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் 2 மணி கடந்தும் (ஐந்து மணி நேரம்) விடுப்பு அட்டை வழங்கப்பட்டவில்லை.
இதால் நோயாளிகள் அங்கிருந்த தாதியர்களிடம் கேட்ட போது வைத்தியரிடம் கேளுங்கள் எனப் பதிலளித்துள்ளனர். 2 மணியின் பின்னர் விடுதிக்கு வெளியில் சென்று நில்லுங்கள் பெயர் அழைத்து சற்று நேரத்தில் விடுப்பு அட்டை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளியில் வந்தும் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் 4 மணியின் பின்னரே விடுப்பு அட்டை வழங்கப்பட்டது.

காலையே டிக்கெட் வெட்டப்பட்டதால் காலை மற்றும் மதியச் சாப்பாட்டைக் கூட தயார்படுத்தாமல் இருந்ததால் கன்ரினில் சாப்பிடவும் மனமின்றிக் காணப்பட்டனர்.
இளேவேளை 7 மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் குறித்த செயலினால் விரக்தியடைந்த நிலையில் கடும் விசனம் வெளியிட்டனர். இத்தகைய செயல்களினால் தான் மக்கள் தனியாரிடம் செல்கின்றனர் எனவும் அங்கு சிலர் வேதனைப்பட்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments